தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை என்கிறது இந்தோனேசியா :- கறுப்புநிற பொதிகளை கப்பலினுள் போட முனைந்தபோது அவற்றை மக்கள் திருப்பி எறிந்துள்ளனர்..
இந்தோனிசியா கடற்பரப்பில் தடுத்துவைத்துவைத்திருக்கும் தமிழர்கள் மீது இனந்தெரியாத 25 படகுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தபடகில் உள்ளவர்கள் இராணுவ உடை அணிந்துள்ளதாகவும் கப்பலில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை..இந்தோனேசியக் கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஈழ அகதிகளின் கப்பலை முற்றுகையிட்டது ஒரு ஒத்திகையாம் என இந்தோனேசிய அரச இணையங்கள் அறிவித்துள்ளன. குழந்தைகளும் பெண்களும் கப்பலில் நீண்ட நாள் தரித்து நிற்பதைக் கூட கருத்தில் கொள்ளாது, நடுச்சாம வேளையில் இவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதனை நியாயப்படுத்தும் விதத்தில் இது ஒரு ஒத்திகை என அரசு அறிவித்திருப்பது, கேளிக்கைக்குரிய, மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும். காணொளி இணைப்பு
சில படகுகள் தங்களின் கப்பலுடன் இணைத்து. கயிற்றுடன் சேர்த்து கட்டப்பட்டதாகவும்அந்த படகில் இருந்து கறுப்பு நிற பாடசாலை பை ஒன்றை கப்பலுக்குள் போட முயற்சி செய்தபோதுதாங்கள் அந்த பையை இடைமறித்து அவர்களின் சிறிய படகுக்குள் தள்ளிவிட்ட தாகவும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது எமது கப்பலில் உள்ளவர்கள் கத்தி குளறிய போது அவர்கள் கப்பலிலிருந்து விலகி சென்று இன்னுமோர் கடற்படை கப்பலுடன் இணந்து சுமார் 500மீட்டர் தொலைவில் தொடர்ந்தும் உள்ளார்கள் என்று கப்பலில் இருக்கும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
பிந்திய இணைப்பு:
தற்போது அந்த படகுகள் திரும்பி சென்றுவிட்டாதகா கப்பலில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர் மீண்டும் அந்த படகுகள் திரும்பி வரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக