JKR. Blogger இயக்குவது.

திங்கள், 21 டிசம்பர், 2009

விடுதலை புலிகளின் ஆயுதக் கப்பல் சந்தேகத்தில் பறிமுதல்


தமிழீழ விடுதலை புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் 'பிறின்ஸஸ் கிரிஸ்டீனா' கப்பல் கைப்பற்றப்பட்டு கொழும்புக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

83 மீற்றர் நீளமுடையதும், பனாமா நாட்டு கொடியுடனும் காணப்பட்ட இக்கப்பல், தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறது. விடுதலை புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்த கேபி என்ற குமரன் பத்மநாதன் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இக்கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010