காணாமல்போன வர்த்தகரும் தோழர்களும் இரகசியப் பொலிசில்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ.எம்.கருணரத்ன இதனை உறுதி செய்தார்.
வர்த்தகரின் நண்பர்களுள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் உள்ளார்.
இவர்கள் பயணம் செய்த 'கப்' வாகனம் காசல் வீதியில் வைத்து நேற்று அதிகாலை பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தன.
ஆனால் காணாமல் போனவர்கள், 'கப்' வண்டியிருந்த இடத்திலேயே இரகசியப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், விசாரணைகள் இடை நிறுத்தப்பட்டதாக விசாரணையை நடத்திய பொலிஸ் உயரதிகாரி குறிப்பிட்டார்.
இரகசியப் பொலிசார் இவர்களைக் கைது செய்ததற்கான காரணமெதுவென இன்னும் தெரிய வரவில்லையெனப் பொலிசார் கூறினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக