மக்கள் விடுதலை இராணுவத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-எதிர்க்கட்சிகள்!

கிழக்கில் புதிதாக உருவாகியுள்ளதாகக் கூறப்படும் மக்கள் விடுதலை இராணுவம் என்ற ஆயுதக் குழுவை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த ஆயுதக் குழுவினை இல்லாதொழிக்கும் வகையிலான இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை இல்லாதொழிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக நம்பகத் தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் நடத்தப்பட்ட ஊடகவயிலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி தலைவர்களை இல்லாதொழிப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக