JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

ஓசியானிக் வைக்கிங் கப்பல், அரசியல் தஞ்சம் கோரியவர்களுடன் மீண்டும் பிடிபட்டுள்ளது


சர்ச்சையை கிளப்பிய ஓசியானிக் வைக்கிங் கப்பல், 53 அரசியல் தஞ்சம் கோரியவர்களுடன் மீண்டும் பிடிபட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் த சிட்னி மோர்னிங் ஹேரலட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கப்பல் இன்று காலை பிடிப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் அஸ்மோர் தீவின் வடமேற்கு திசையில் 22 கடல்மைல்களுக்கு அப்பால் இந்த கப்பல் மீண்டும் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த கப்பலில் இருந்து 78 இலங்கை அதிகள், இரண்டு மாதங்களின் பின்னர், இந்தோனேசியாவில் தரையிறங்க சம்மதித்து தற்போது தடுப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் இந்த கப்பல் அகதிகளுடன் பிடிப்பட்டுள்ளமையை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கப்பலில் உள்ள அகதிகளுடன் இலங்கையர்களும் உள்ளடங்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், அகதிகளை ஏற்றிக்கொண்டுச் சென்ற மற்றுமொறு படகு மூழ்கியவேளையில், அவர்களால் கோரப்பட்ட உதவியை அடுத்தே ஓசியானிக் வைக்கிங் கப்பல், உதவிக்கு சென்று குறித்த கப்பலில் இருந்தவர்களை காப்பாற்றி ஏற்றவந்த வேளையிலேயே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அகதிகள் அனைவரும் அவுஸ்திரேலியாவின் கிரிஷ்மஷ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பரெடன் ஓ கோனர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010