JKR. Blogger இயக்குவது.

திங்கள், 14 டிசம்பர், 2009

யாழ்.பண்ணைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்.

யாழ்.பண்ணை மீனாட்சியம்மன் கோவிலை அண்டிய மைதானம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையின் கழிவு நீர் பண்னைப் பாலத்துடன் கலக்கும் வடிகால் பகுதி ஆகிய இடங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று காலை நேரில் பார்வையிட்டார்.

சுகாதார அமைச்சின் புதிய வைத்திய பிரிவொன்றிற்றாக பண்ணை மீனாட்சியம்மன் கோவிலை அண்டிய மைதானத்தின் ஓர் பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு விஜயம் செய்த அமைச்சர் தேவானந்தா அவர்களிடம் அப்பகுதி மக்கள் தமது விமர்சனங்ளைத் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்துரையாடி உரிய தீர்வொன்று பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அமைச்சரவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையின் கழிவு நீர் பண்னைப் பாலத்துடன் கலக்கும் வடிகால் பகுதியை பார்வையிட்டதுடன் அதனை சிறந்த முறையில் புனரமைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரையும் வழங்கினார். அமைச்சரின் இந்த விஜயத்தின் போது யாழ்மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா இளங்கோ றீகனும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010