JKR. Blogger இயக்குவது.

புதன், 16 டிசம்பர், 2009

அனைவரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க அணிதிரள வேண்டும் -சரத் பொன்சேகா


நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமாயின் தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஆட்சியை இல்லாதொழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் புறக்கோட்டையில் இடம்பெற்ற ஜனநாயகத்தை இல்லாதொழிக்க நிறைவேற்ற அதிகார முறைமை என்ற தலைப்பிலான நூல் வெளியீ;ட்டு விழாவில் கலந்துக் கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான கருத்துக்களை இந்த நூல் கொண்டிருப்பதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஏகாதிபத்தியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டு;ள்ளார். நிறைவேற்று அதிகார முறையின் பயங்கரதன்மையே தம்மை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு உந்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மிகவும் கீழ்த்தரமான முறையில் சட்டத்திற்கு எதிராக நிறைவேற்று அதிகார பலம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படுகொலை செய்தநபர் ஒருவருக்கு ஆறுவருட சிறைத்தண்டனை எழுத்தாளர் ஒருவர் கருத்துக்களை வெளியிட்டால் இருபது ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நிறைவேற்று அதிகார பலத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான வகையில் எதையும் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010