டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுத்தது இலங்கை

-இலங்கை இந்திய அணிகளுக்கிடையே நாக்பூரில் 9/12/2009 நடைபெற்ற இருபது - 20 போட்டியில் ..... ஓட்டங்களால் இந்திய அணி தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவில் அபார துடுப்பாட்டமும் எஞ்சலோ மெத்திவ்ஸ், சனத் ஜயசூரிய ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். அதன் பிரகாரம் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்களைப் பெற்றது.
குமார் சங்கக்கார 37 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பெற்றார். கப்புகெதர 47 ஓட்டங்களையும், தில்ஷான் 34 ஓட்டங்களையும் தமது அணிக்கு பெற்றுக்கொடுத்து வலு சேர்த்தனர்.
கடுமையான இலக்கினை அடைவதற்காக களமிறங்கிய இந்திய அணிக்கு குறிப்பிட்ட ஓவர்களுக்குள் அதனை அடைய முடியவில்லை. இந்திய அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கௌதம் காம்பீர், விரேந்திர ஷேவாக் ஆகியோர் முறையே 55,26 ஆகிய ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் மெத்திவ்ஸ், ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இவ்விரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த இருபது - 20 போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி மொஹாலியல் நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக