JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

ஜனாதிபதித் தேர்தல் : த.தே.கூ. உறுப்பினர் மத்தியில் கருத்து முரண்பாடுகள்? (


ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை அறிவிக்காத நிலையில் கட்சியின் உறுப்பினர்களிடையே முரண்பட்ட கருத்துகள் வலுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமது கட்சியின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாவிடின் தாம் சுயேட்சையாகக் களமிறங்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்குக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதாகவும் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிவாஜிலிங்கம் கலந்துகொண்டதுடன் தமது கட்சியின் நிலைப்பாட்டைப் பிரத்தியேக உரையின் மூலம் வெளிப்படுத்தினார்.

ஆட்சி மாற்றத்துக்காக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ள அதேவேளை, இது குறித்து மக்கள் கூறும் கருத்தினையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என துரைரட்ணசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தனது இறுதி முடிவு குறிதது எதுவித தகவல்களையும் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010