பிரதமர் மன்மோகன் செல்லவிருந்த விமானத்தில் விபத்து

பிரதமர் மன்மோகன் சிங் செல்லவிருந்த விமானம் விமான நிலையத்திலேயே விபத்தில் சிக்கியது. பிரதமர் விமானத்தில் அமராததினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தினால் டெல்லி விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டென்மார்க்கில் நடைபெற்றுவரும் பருவநிலை குறித்த கோபன்ஹேகன் மாநாட்டில் பங்கேற்க இன்று மதியம் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி விமான நிலையம் வந்தார். இந்நிலையில் அவர் செல்லவிருந்து விமானம் தீடீரென விபத்தில் சிக்கியது.
பிரதமர் செல்லவிருந்த விமானத்தின் மீது ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த டேங்கர் வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தின்; காரணமாக விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விபத்து நடைபெற்ற போது பிரதமர் மன்மோகன் சிங் விமானத்தில் இல்லாததினால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தனால் பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணம் தாமதமானது, அவரின் கோபன்ஹேகன் பயண திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமரின் விமானத்தின் மீது டேங்கர் வாகனம் மோதிய விபத்து தற்செயலாக நடைபெற்றதா? அல்லது ஏதேனும் சதி காரணமா? என்று உயர்மட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விபத்து சம்பவத்தினால் டெல்லி விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக