JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்கள் குரேஷியாவிலிருந்து இறக்குமதி


வடபகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான நிலக்கண்ணி வெடிகளை துரிதகெதியில் அகற்றும் நோக்கில் ஐந்து இயந்திரங்கள் குரேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலக்கண்ணி வெடி அகற்றும் இந்தக் கருவிகளைத் தருவிப்பதற்காக சுமார் 27 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், செக்கோஸ்லோவாக்கியாவிடமிருந்தும் இவ்வாறான கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கருவிகளைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு ஐயாயிரம் சதுர மீற்றர் பரப்பில் உள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்ற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வகை இயந்திரங்களைத் தூர இருந்து கொண்டு இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010