மாந்தை மேற்கில் 22 ஆம் திகதி மீள்குடியமர்வு குறித்து இன்று ஆராய்வு

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 22ஆம் திகதி மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை மன்னார் அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலாஸ்பிள்ளை தலைமையில் அரச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த விக்கிரமசிங்க, அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம். ஹால்தீன், இணைப்புச் செயலாளர் அலிக்கான், மாவட்ட இணைப்பாளர் என்.எம். முவ்பர் மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 22ஆம் திகதி மக்கள் மீளக்குடியேற்றப்பட இருப்பதால் அவர்களுக்குக்கான நீர், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, போன்ற விடயங்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்துள்ளார்.
அதேவேளை, மீள்குடியேற்றம் இடம்பெறும் பகுதிகளில் தற்காலிகமாக மருத்துவ சேவைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி யூட்ரதனியிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக