சூப்பர்-8 வாய்ப்பை இழந்தது வயாம்பா அணி

முதலாவது சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூர், டெல்லி, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. `ஏ’ பிரிவில் டெக்கான் சார்ஜர்ஸ், சோமர்செட் , டிரினிடாட் அண்ட் டுபாகோ, `பி’ பிரிவில் நிï சவுத் வேல்ஸ், சஸ்செக்ஸ், ஈகிள்ஸ், `சி’ பிரிவில் கேப் கோப்ராஸ், ஒட்டேகோ, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், `டி’ பிரிவில் டெல்லி டேர்டெவில்ஸ், விக்டோரியா, வயாம்பா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் போட்டியின் 6ஆவது நாளான நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த டி பிரிவின் கடைசி லீக் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த வயாம்பா அணியும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த விக்டோரியா அணியும் மோதின.
வெற்றி பெற்றால் மட்டுமே 2ஆவது சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியுடன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று வயாம்பா அணி ஆனால் வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் வழக்கம் போல் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற சிரமப்பட்டனர்
ஆரம்ப ஆட்டக்காரர் உடாவாட் (1 ஓட்டம்) 2-வது ஓவரிலேயே வீழ்ந்தாலும், குலதுங்க, வான்டர்ட் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். முடிந்த வரை துரிதமாக ஓட்டங்களை சேர்த்தனர்.20 ஓவர்கள் முடிவில் வயாம்பா அணி 9 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்களை சேர்த்தனர்.
இருப்பினும் வெற்றியை பற்றி கவலைப்படாமல் இலக்கை நோக்கி விளையாடிய விக்டோரியா அணி ஒரு வழியாக . 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய விக்டோரியா அணியால் 4 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது .
வயாம்பா அணி ஆறுதல் வெற்றியுடன் போட்டியை விட்டு வெளியேறியது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக