இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் யாழ். மாணவர்களுக்கான பரீட்சை
இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் இயற்கை விஞ்ஞான பீடத்திற்கு விண்ணபித்த யாழ். மாணவர்களுக்கான ஆங்கில பாட நெறி மதிப்பீட்டுப் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பல்கலைகழக யாழ் பிராந்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது. அதேவேளை இலங்கை திறந்த பல்கலைக் கழக யாழ். பிராந்திய நிலையத்தில் 2009/2010 ஆம் கல்வி ஆண்டுக்கான சமூக விஞ்ஞான சான்றிதழ் கற்கைநெறி மற்றும் சமூக விஞ்ஞான கலைப் பட்டத்திற்கான நெறிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கே மேற்படி பரீட்சை நடைபெறவுள்ளதாக அதன் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக