JKR. Blogger இயக்குவது.

திங்கள், 19 அக்டோபர், 2009

மீள்குடியமர்வு தொடர்பில் இலங்கை அரசுடன் நெருங்கிய உறவு : நிரூபமா ராவ்


இடம்பெயர் மக்களின் உடனடி மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவினை பேணி பேச்சுக்கள் நடத்தப்படுவதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற குழுவின் விஜயத்தின் பின்னர், இடம்பெயர்ந்தவர்களின் குடியேற்றத்துக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளமையை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிதி, மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்துக் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் விரைவான ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பொருட்டு, பரஸ்பரம் புரிந்துணர்வினை ஏற்படுத்தும் வகையிலான உறவுகளை வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010