குருநகர் ஐந்துமாடி குடியிருப்பாளர்களுக்கு அப்பால் கிழக்குப்புற வீதி திறந்து விடப்பட்டதால் மக்கள் குடியேற்றம்!

யாழ். குருநகர் ஐந்துமாடிக் குடியிருப்பாளர்களுக்கு அப்பால் கிழக்குப் புறமாக உள்ள வீதி மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்ட பின்னர் இவ்வீதியின் வடக்குப் புறமாக உள்ள வீடுகளில் மக்கள் மீளவும் குடியேறி வருகின்றனர். உடைந்து சேதமடைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் திருத்தியமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் குருநகர் கடற்கரை வீதியின் பழைய பூங்கா வீதியில் (பிள்ளைத்தாச்சி வீதிச்சந்தி) இருந்து கொழும்புத்துறைக்கு செல்லும் கடற்கரை வீதி பாரியளவில் சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வீதியினூடாக பயணிக்கும் மக்கள் மிகுந்த போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாசையூர் புனித அந்தோனியாhர் ஆலயம் மற்றும் பாசையும+ர் மீன்சந்தை ஆகிய இடங்களுக்குச் செல்லும் மக்களும் இவ்வீதியையே தற்போது பாவித்து வருகிறார்கள். எனவே இவ்வீதி உடன் திருத்தியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அம்மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். குருநகர் கடற்கரைவீதி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் மீனவர்கள் குறிப்பிட்ட பாதையூடாக மட்டும் கடலில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும் இப்பகுதிகளில் குடியேறி வசித்துவரும் மக்ள் எவரும் கடலில் கால் நனைக்கக்கூட அனுமதிக்காமல் படையினர் இவ்வீதியின் வடக்குப் புறத்தில் கடற்கரை வீதிக்கருகாமையில் தொடர்ந்தும் முட்கம்பி வேலிகளை அமைத்துள்ளனர். அத்துடன் அவைகளைப் புதுப்பித்து செப்பனிட்டும் வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக