JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மன்னாரில் இருந்து அடம்பன் கிராமத்துக்கு பஸ் சேவை


மன்னாரில் இருந்து அடம்பன் கிராமத்துக்கு கடந்த 22ஆம் திகதி முதல் புதிதாக போக்குவரத்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 22 ஆம் திகதியன்று மாந்தை மேற்குப் பகுதியில் மக்கள் மீள குடியமர்த்தப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து இம்மக்களின் நலன்கருதி உடனடியாகப் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை பஸ் ஒன்றே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.நாளாந்தம் மன்னாரில் இருந்து காலை 8.00 மணிக்கும், மாலை 3.00 மணிக்கும் இரண்டு சேவைகள் இடம்பெறுகின்றன. இப்பஸ் சேவை உயிலங்குளம் சோதனைச் சாவடியூடாக அடம்பன் சென்றடையுமென தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010