சானியா ஜோடி தோல்வி
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் வானியா கிங் ஜோடி தோல்வியைத் தழுவியது. ஒசாகாவில் வியாழக்கிழமை நடைபெற்ற கால் இறுதியில், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சானியா ஜோடி ஒரு மணி 7 நிமிடத்தில் 4-6, 2-6 என தரவரிசையில் இடம்பெறாத பிரான்ûஸச் சேர்ந்த ஜூலி காய்ன், மாட்ஹில்டே ஜோடியிடம் வீழ்ந்தது. முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில், சானியா 6-4, 6-3 என உக்ரைனின் விக்டோரியா குடுசோவாவை வெளியேற்றினார். வெள்ளிக்கிழமை நடைபெறும் கால் இறுதியில், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை மரியான் பர்டோலியுடன் சானியா மோத உள்ளார்.<

0 கருத்துகள்:
கருத்துரையிடுக