JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

செய்தியறிக்கை




ஐரோப்பிய ஒன்றிய கொடிகள்
ஐரோப்பிய ஒன்றிய கொடிகள்

லிஸ்பன் உடன்படிக்கைக்கு ஐரிஷ் வாக்காளர்கள் ஆதரவு

ஐரிஷ் வாக்ககாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரங்களை வழங்குவதங்கான லிஸ்பன் உடன்படிக்கைக்கு உறுதியான சம்மதத்தை வழங்கியுள்ளனர்.

இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்த ஐரிஷ் பிரதமர் பிரையன் கவன், மக்கள் மிகத் தெளிவான தொனியில் இந்த சம்மதத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

வாக்குகள் தொடர்ந்தும் எண்ணப்பட்டு வருகின்றபோதிலும் இதுவரை வெளியான முடிவுகளின்படி மூன்றிலிரண்டு பங்கு வாக்காளர்கள் உடன்படிக்கையை அங்கிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மெனுவல் பெராசோவும், கடந்த வருடம் உடன்படிக்கைக்கு எதிராக அமைந்த மக்கள் தீர்ப்புக்கு மாறாக, இம்முறை சாதகமாக வெளியாகியுள்ள மக்கள் அங்கிகாரத்தைப் பெரிதும் வரவேற்றுள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன், ஐரோப்பியர்களுக்கு பொதுவான பிரச்சனைகள் குறித்து இனி இணைந்து பணியாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.


இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

படாங் நகரம்
படாங் நகரம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சென்று சேர்ந்து கொண்டிருக்கும் மீட்பு பணியாளர்கள் பல சடலங்களை கண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், மேற்கு சுமத்ராவில் மூன்று கிராமங்கள் நிலச்சரிவில் சிக்கியதாகவும், இதில் ஒரு இடத்தில் கல்யாண கோஷ்டி ஒன்று மண்ணில் புதைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படாங் என்ற இடத்தில் இடிபாடுகள் இடையே சிக்கியிருந்த ஒருவர் அனுப்பிய தொலைப்பேசி குறுந்தகவலில், தான் இன்னும் பலரும் இடிபாடுகள் இடையே உயிரோடு சிக்கியிருப்பதாக கூறியுள்ளார்.

பல ஆயிரக்கணக்கானவர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தாங்கள் கணக்கிடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நிவாரண உதவியின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா போர்கப்பல் ஒன்றில் மருத்துவ குழுவை அனுப்பியுள்ளது.


பிலிப்பைன்ஸில் சூறாவளி தாக்குதல்

பர்மா சூறாவளியின் பாதை
பர்மா சூறாவளியின் பாதை

பார்மா என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சூறாவளி பிலிப்பைன்ஸின் வடக்கு கிழக்கு பிரதேசத்தை தாக்கியுள்ளது.

பிரதேசத்தின் மின்விநியோகக் கட்டமைப்பபை சிதைத்து, வீடுகளின் கூரைகளையும் மரங்களையும் பிடுங்கியெறிந்துள்ள இந்த சுழல்காற்றில் சிக்கி இதுவரை குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்மா சூறாவளி தலைநகர் மனிலா மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களையும் தாக்கியுள்ளது. அங்கு பெரும்பாலான பகுதிகள் கடந்த ஒருவார காலமாக பெரும் வௌ்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

தற்போது இந்த சுழல்காற்று தாய்வானை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் அங்கும் ஏராளமான கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் வீசிய கெட்சானா என்ற சூறாவளியால் பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.


ஆப்கானிஸ்தான் தேர்தலில் ஐ.நாவின் நடுநிலை குறித்து கேள்வி

அப்துல்லா அப்துல்லா
அப்துல்லா அப்துல்லா

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐ.நாவின் பங்கு குறித்து விசாரணை வேண்டும் என்று அதிபர் ஹமீது கர்சாயின் பிரதான் எதிர் வேட்பாளரான அப்துல்லா அப்துல்லா கோரியுள்ளார்.

அதிபர் ஹமீது கர்சாய் அவர்களின் ஆதரவாளர்கள் பெருமளவிலான தேர்தல் முறைகேட்டில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள அப்துல்லா அப்துல்லா, இந்த தேர்தலில் ஐ.நா விசேஷ தூதர் கேய் ஈடி அவர்களின் பக்கச்சார்பற்ற நிலை குறித்து தீவிர சந்தேங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கின்றார்.

தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.நா முட்டுக்கட்டை போட்டதாக கூறிய ஆப்கானிஸ்தானில் இருந்த மூத்த ஐ.நா அதிகாரியான பீட்டர் கால்பிரைத் அவர்களை பணியில் இருந்து நீக்கியதில் கேய் ஈடி பங்கு இருக்கிறது.
பீட்டர் கால்பிரைத்தின் குற்றச்சாட்டுகளை கேய் ஈடி நிராகரித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010