மைக்கேல் ஜாக்சன் இறுதிச் சடங்கு செலவு ரூ. 5 கோடி!

சமீபத்தில் மரணமடைந்த ‘பாப் கிங்’ மைக்கேல் ஜாக்சனின் இறுதிச் சடங்கிற்கு ரூ.5 கோடி செலவாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் அவரது குடும்பத்தினர். பாப் இசையுலகின் பிதாமகனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சன், கடந்த ஜூன் 25 ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். ஐம்பது வயதே ஆன ஜாக்ஸனின் மரணம் உலக முழுதும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரணத்துக்குப் பின், மைல்கேல் ஜாக்சனின் உடல் 70 நாட்களுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் ஜாக்சனின் உடலை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டி உள்ளிட்ட பொருள் ரூ.35 ஆயிரத்துக்கும், பூக்கள் மட்டுமே ரூ.16 ஆயிரத்துக்கும் வாங்கப்பட்டதாக ஜாக்சன் குடும்பத்தார் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. செலவில் பெரும் தொகை ஜாக்சனை அடக்கம் செய்த இடத்துக்கே அளிக்கப்பட்டு விட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக