கடிதம் பகிரங்கமானது நெறிமுறைகளுக்கு முரண்-அமைச்சர் சமரசிங்க

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதம் கிடைத்துள்ளது. சீருடையில் எழுதியிருக்கின்ற கடிதத்தை ஜனாதிபதி வெளியிட்டிருக்கமாட்டார். அந்தக் கடிதத்தை ஜெனரல் பகிரங்கப்படுத்தியிருந்தால் அது நேர்மையற்றது. நீதி நெறிமுறைகளுக்கு முரணானது என மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், ஜெனரல் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு பதிலளிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். அக்கடிதம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு எனக்கு அதிகாரமும் இல்லை, அக்கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தால் அது நேர்மையற்றது.
கடிதத்தின் பிரதியொன்று என்னிடமும் இருக்கின்றது. எனினும் ஜனாதிபதி பதிலளித்ததன் பின்னரே கடிதம் தொடர்பில் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்கமுடியும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக