JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 24 நவம்பர், 2009

பனிக்கரடியிடம் கடி வாங்கிய அம்மணி:வீடியோ


பெர்லின் விலங்கியல் பூங்காவில் பனிக்கரடிகளால் தாக்கப்பட்ட பெண்மணி உண்மை சம்பவத்தின் வீடியோ வோடு கூடிய பதிவு இது.

சிலர் விலங்கியல் பூங்கா, சுற்றுலா செல்லும் போது கை கால்களை வைத்து கொண்டு சும்மா இருப்பதில்லை. தன் வீர தீர செயல்களை அப்போது தான் காட்டுவார்கள். விலங்குகளை நோண்டுவது, ஆபத்தான இடங்களில் ஏறி 'நாங்களும் ரவுடிதான்!' என்று காட்டுவர்.


மாப்பு! வச்சிட்டண்டா ஆப்பு!! என்பது போன்ற சம்பவம் 32 வயது அம்மணிக்கு பெர்லின் விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது. அம்மணி வீராவேசத்தை காண்பிக்க பனிக்கரடிகள் இருக்கும் குளத்தில் வரப்பின் மேலேறி குளத்தினுள் குதித்துள்ளார். பனிக்கரடிகள் சும்மா இருக்குமா? விளையாடுவதற்கு தான் எதையோ தூக்கி போடுகிறார்கள் என்றெண்ணி அம்மணியை கடித்து விளையாட ஆரம்பித்து விட்டன.

கதறிய அம்மணியை காப்பற்ற கயறு போட்டார்கள் பாதுகாவலர்கள். பாதி மேலே வந்த அம்மணி மீண்டும் நீரினுள் விழுந்து விட்டார். அப்போது ஒரு பனிகரடி அம்மணியின் பின்புறத்தையும் கால்களையும் பதம் பார்த்து விட்டது.


இறுதியில் ஒருவழியாக அம்மணியை காப்பாற்றிவிட்டார்கள். அம்மணி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிகபட்டுள்ளார். பனிக்கரடிகள் அய்யோ வடை போச்சே... என்று வருத்தத்தில் இருக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010