சரத் பொன்சேகா சர்வதேசத்தின் கையாள்: ஜாதிக ஹெல உறுமய

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, சர்வதேச சூழ்ச்சிகளின் பின்னணியில் செயற்படுவதாக, ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக, செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர்,சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெளிநாட்டு துருப்புகள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதற்கான சான்றுகளை உடுவே தம்மாலோக தேரர் வழங்கவில்லை.
சரத் பொன்சேகா ஜனாதிபதி பதவிக்கு உரித்தானவர் அல்லர். அவர் பதவிக்கு வந்தால் நாட்டின் எதிர்காலம் அழிவடைந்து விடும் என்றும் உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடையப்பட்ட யுத்த வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, ஆகியோரும் பங்காளிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக