மட்டக்களப்பு கன்னியர் மடத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற பிள்ளைகளுக்கு வெண்மயில் அமைப்பு உதவி.
கடந்தகால யுத்த அனர்த்தங்களினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு அனாதரவான நிலையில் மட்டக்களப்பு கன்னியர்மடத்தில் தங்கியுள்ள பெண் பிள்ளைகளுக்கு வெண்மயில் நிறுவனம் உதவிகளை வழங்கியுள்ளது.வெண்மயில் அமைப்பின் தலைவரும் ஜேர்மன் பிராந்திய ஈபிடிபி அமைப்பாளருமான மாட்டின் ஜெயா அவர்கள் கடந்த வாரம் அங்கு விஜயம் மேற்கொண்டபோதே மேற்படி உதவிகளை வழங்கினார். ஜெயந்திபுரத்தில் அமைந்துள்ள கன்னியர்மடத்திற்கு மாட்டின் ஜெயா அவர்களும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஈபிடிபி அமைப்பாளருமான சிவா மாமா அவர்களும் விஜயம் மேற்கொண்டபோது கன்னியர் மடத்தின் நிர்வாகிகளான அருட்சகோதரி அனற்றா மற்றும் அருட்சகோதரி ஏஞ்சலா ஆகியோர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றனர்.
கன்னியர் மடத்தின் நிர்வாகிகளுடனும் குறிப்பாக அங்கு தங்கியுள்ள ஆதரவற்ற பிள்ளைகளுடனும் கலந்துரையாடிய மாட்டின் ஜெயா அவர்கள் வளமானதொரு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அவர்களுக்கு தெரியப்படுத்தியதுடன் அவாகளுக்கு மதிய போசனம் வழங்கியதுடன் பிள்ளைகளின் தேவைகளின் பொருட்டு ஒரு தொகையினையும் நிதி உதவியாக வழங்கினார். மேலும் எதிர்வரும் காலத்திலும் வெண்மயில் அமைப்பால் தொடர் உதவிகள் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். ஆதரவற்ற பெண்பிள்ளைகளின் நலன் குறித்த வெண்மயில் அமைப்பின் அக்கறை குறித்து தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் கன்னியர்மட நிர்வாகிகள் தெரிவித்துக்கொண்ட அதேவேளை அங்கு தங்கியுள்ள பிள்ளைகளும் தமது நன்றிகளை பகிர்ந்துகொண்டனர்






0 கருத்துகள்:
கருத்துரையிடுக