இராணுவப்புரட்சி தொடர்பாக சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு

இலங்கையில், இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தமது பதவி ஓய்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இவ்வாறான வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டனர் என்று சரத் பொன்சேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை இந்திய அமைச்சர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக