செய்தியறிக்கை
| |
தலிபான் ஆதரவாளர்கள் |
இறந்ததாகக் கூறப்பட்ட தலிபான் தலைவர் பிபிசியிடம் பேசியுள்ளார்
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும், உயிரிழந்திருக்கக் கூடுமெனவும் அறிவிக்கப்பட்ட தாலிபனின் வட மேற்கு சுவாத் பிராந்தியத்திற்கு பொறுப்பான தலைவர் தற்போது ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பி்பிசிக்கு தெரிவித்துள்ளார்.
தாலிபன் தலைவர் மௌலானா ஃபஸ்சுல்லா பாகிஸ்தானிலுள்ள பிபிசி செய்திப் பணியகத்திற்கு தொலைபேசி மூலம் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்.
பல மாதங்களின் பின்னர் முதற் தடவையாக இவர் ஊடகங்களுக்கு பேசியுள்ளார்.
பாகிஸ்தானிய இராணுவம் பாரிய நடவடிக்கை மூலம் சுவாத் பிராந்தியத்தை மீளக் கைப்பற்றுவதற்கு முன்னதாக அந்தப் பகுதியில் ஷரியா சட்டப்பிரிவொன்றை அமல்படுத்த முயற்சி செய்த தாலிபன் அமைப்புக்கு ஃபஸ்சுல்லாவே தலைமை வகித்தார்.
சுவாத்திலுள்ள இராணுவத்திற்கு எதிராக தாலிபன் மீண்டும் கடுமையான தாக்குதல்களை விரைவில் தொடுக்கும் என ஃபஸ்சுல்லா எச்சரித்துள்ளார்.
ஊழல் தொடர்பில் செல்வந்த நாடுகள் மெத்தனம் காட்டக்கூடாது என்று கோரிக்கை
| |
ஊழல் மருத்துவத்துறையையும் வெகுவாக பாதித்திருப்பதாக கூறப்படுகிறது |
இந்த நாடுகளில் இருந்து இயங்கும் நிறுவனங்கள் பல சமயங்களில் லஞ்சம் கொடுப்பதில் ஈடுபடுவதாகக கூறியுள்ள டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், உதவி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஒளிவுமறைவின்றி செய்யப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது.
180 நாடுகளில் ஊழல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது இந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்து ஊழல் மிகக் குறைந்த நாடாக பார்க்கப்படுகிறது. சோமாலியா ஊழல் நிறைந்த நாடாக இருக்கிறது. ஆப்கனும் ஊழல் அதிகமான நாடாகவே பார்க்கப்படுகிறது.
ருவாண்டா ஆயுதக்குழுவின் தலைவர்கள் கைது
| |
எப் எல் டி ஆர் என்ற ருவாண்டாவின் விடுதலைக்கான ஜனநாயகப் படைகளின் தலைவரான இக்னஸ் முர்வனாஷ் யாக்கா என்பவரும் அவருக்கு அடுத்த நிலையிலிருந்த ஸ்ற்றட்டன் முசோனியும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத குற்றச்செயல்கள் தொடர்பான சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியிலிருந்து ஆயுதக்குழு நடவடிக்கைகளை நெறிப்படுத்தியதாக முர்வனாஷ் யாக்கா மீது ஐ.நா அமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.
1994 ஆம் ஆண்டில் சுமார் எட்டு லட்சம் மக்கள் உயிரிழக்கக் காரணமான ருவாண்ட இனப்படுகொலையை அடுத்து இந்த அமைப்பு காங்கோவுக்கு இடம்மாறியமை குறிப்பிடத்தக்கது.
லாவோஸ் அகதிகளை விடுவிக்கக் கோரிக்கை
| |
அகதிச் சிறார்கள் |
மொங் இனத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கடந்த மூன்று வருட காலமாக குடியேறுவோருக்கான தடுப்பு முகாம் ஒன்றில் உள்ள இரண்டு சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யூஎன்எச்சிஆர் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவர்களில் அனேகமான சிறுவர்கள் சிறைக்கூடங்களிலேயே பிறந்தவர்களாவர்.
மொங் இனத்தவர்கள் தஞ்சமளிக்கப்படவேண்டியவர்கள் என ஐ.நா தெரிவிக்கின்ற நிலையில், இவர்கள் பொருளாதார காரணங்களால் குடியேறியவர்கள் எனவும் அவர்கள் லாவோசுக்கே மீள அனுப்பப்படவேண்டியவர்கள் எனவும் தாய்லாந்து கூறி வருகின்றது.
| |
தமிழ் கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் |
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கின்றது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் அழைப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு பொரளை மகசின் சிறைசாலைக்கு எதிரில் நடைபெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய சோசலிஸ கட்சியைச் சேர்ந்த சிறிதுங்க ஜயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் மாகாணசபை உறுப்பினரான என்.குமரகுருபரன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் இதில் கலந்து கொண்டார்கள்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
வடபகுதி மக்களின் போக்குவரத்து சிரமங்கள் குறித்த வழக்கு
| |
இலங்கை உயர்நீதிமன்றம் |
இந்த மனுவை சட்டத்தரணியான அப்பாத்துரை விநாயகமூர்த்தி தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ, இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர், சட்டடமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
வடக்கில் இருந்து மக்கள் தென் இலங்கைக்கு வருவதை தடுக்கும் ரீதியிலான பாதுகாப்பு பிரிவினரின் செயல் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனு விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சுதந்திரமாக செல்ல அனுமதி வழங்கும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமை, இச்செயலினால் மீறப்படுவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்படி வடக்கிலிருந்து தென் இலங்கைக்கு வரும் மக்களை சோதனை சாவடிகளில் அநாவசியமான முறையில் சோதனை செய்வது மற்றும் தென் இலங்கைக்கு வருவதை தடைசெய்யும் பாதுகாப்பு பிரிவினரின் செயல்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த விசாரணையை மார்ச் மாதம் 12 ஆம் திகதி நடத்த உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்புப் படையினரின் வெற்றியைக் குறிக்கும் நாணயத்தாள்
|
புதிய ஆயிரம் ரூபாய் தாள் |
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையும், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதையும் குறிக்கும் வகையிலான ரூபாய் தாள் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
ஆயிரம் ரூபாய்க்கான இந்த நாணயத்தாளில், இலங்கையின் தேசியக் கொடியை பாதுகாப்புப் படையினர் தாங்கிப் பிடித்திருப்பது போன்ற படம் இடம்பெறுகிறது.
அதன் அருகில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படமும் இடம்பெற்றிருக்கிறது.
இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக