JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 17 நவம்பர், 2009

ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியை சந்தித்தார்.


ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்த ஜெனரல் சரத் பொன்சேகா மரபு அடிப்படையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இதன்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி நன்றி பாராட்டியுள்ளார். தமது பாதுகாப்பு தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் இந்தப் பிரச்சினை குறித்து எழுத்து மூலமாக அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். மேலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி உத்தரவாதமளித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010