JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

அமெரிக்க அறிக்கைக்கு டிசம்பரில் இலங்கையின் பதில் அறிக்கை

Flag Sri-Lanka animated gif 240x180இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை செய்ய ஜனõதிபதி மஹிந்தராஜபக்ஷ நியமித்த விசாரணைக்குழு அடுத்த மாதம் அதன் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. டிசம்பர் மாத முடிவில் மேற்படி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசாரணைக் குழுவிடம் உத்தரவிட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை மேற்கோள்காட்டி அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

அமெரிக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் பற்றிய அறிக்கை, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் சேகரித்த ஊடக அறிக்கைகள் மற்றும் தகவல்கள் உட்பட பல்வேறு வட்டாரங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்காவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அறிக்கையில் அடங்கியிருப்பவை பற்றி விசாரிக்க ஜனாதிபதி ராஜபக்ஷ குழு ஒன்றை நியமித்திருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010