JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

மும்பை தாக்குதல்: அடக்கமாக செய்தி வெளியிட டிவிகளுக்கு உத்தரவு


டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதால், முதலாமாண்டு நினைவு தினத்தன்று கவனத்துடன் செய்திகளை ஒளிபரப்புமாறு டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் உலகம் அதிர்ந்தது. இந்த சம்பவம் நடந்தது ஒரு ஆண்டு முடியப் போகிறது.

இதையடுத்து டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளது.

அதில், மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவுதினத்தன்று, சிறப்பு நிகழ்ச்சிகள், செய்தித் தொகுப்புகள், பேட்டிகள், டாக் ஷோக்கள் உள்ளிட்டவை ஒளிபரப்பப்படும்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்திகள் , நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்ததை நேரடியாக டிவி நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.

குறிப்பாக தாஜ் ஹோட்டலுக்குள் முற்றுகையிட்டிருந்த தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானில் இருந்தபடி அவர்களை இயக்குவித்த தீவிரவாதிகளுக்கு வெளியில் நடந்தது நேரடியாக ஒளிபரப்பு செய்தது போலாகி விட்டது.

இந்த நிலையில் முதலாண்டு நினைவுதினத்தின்போது அடக்கமாக செய்திகளை வெளியிடுமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010