JKR. Blogger இயக்குவது.

வியாழன், 12 நவம்பர், 2009

கைகலப்பில் வர்த்தகர் பலி : சந்தேக நபர்கள் தலைமறைவு


ஹட்டன் புளியாவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத சிலரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட வர்த்தகர் கருப்பண்ணன் விஸ்வநாதன் எனத் தெரியவந்துள்ளது. சம்பவ தினம் வர்த்தகரின் மருமகன் பயணித்த லொறியில் வந்தோர், மதுபோதையில் லொறியினுள்ளே தாளம் போட்டுப் பாட்டுப்பாடி வந்துள்ளனர். இதைக் கண்ட வர்த்தகரின் மருமகன் அவர்களிடம் வாகனத்தைச் சேதப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதன்போது வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர் வாகனம் புளியாவத்தையை அடைந்ததும் அதில் வந்தவர்கள் இறங்கிச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் பொல்லுகளுடன் வந்துள்ளனர்.

குறிப்பிட்ட வர்த்தகரின் கடையின் முன் நின்று இவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதன்போது அவ்விடம் வந்த வர்த்தகரை பலமாகத் தாக்கியுள்ளனர். தலையில் பலமாக தாக்கப்பட்ட வர்த்தகர் மயக்க நிலையை அடைந்தவுடன் அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்துள்ளனர்.

பின்னர் வர்த்தகர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மயக்க நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010