ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மற்றும் மொபிட்டல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது!
ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மற்றும் மொபிட்டல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் ஒன்றைச் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று திறந்து வைத்தார்.ரெலிக்கொம் மற்றும் மொபிட்டல் நிறுவனத்தின் தலைவர் திருமதி லிஸா டி சில்வாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அந்நிறுவனத்தின் வடக்குக் கிழக்கு மற்றும் யாழ். பிராந்தியத்திற்கான முகாமையாளர்கள் விற்பனை விநியோகத்திற்கான சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உட்படப் பல்வேறு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மற்றும் மொபிட்டல் நிறுவனத்தில் தற்காலிகமாகப் பணியாற்றிய போக்குவரத்து உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கி உரை நிகழ்த்தும் போது ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் புதிய கிளை ஒன்றைத் திறந்து வைத்துப் பணிகளை முன்னெடுக்கும் ரெலிக்கொம் மொபிட்டல் நிறுவனத்திற்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் அதன் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு வேண்டிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக