ஜக்சினின் ஆவியுடன் பிரபல உளவியல் திறனாளியான ஜேன் வலஸ் உரையாடல்

மருந்துகளிற்கு அடிமையானமைதான் தனது மரணத்திற்கு காரணம் என பிரபல பொப்பிசைப் பாடகர் மைக்கிள் ஜக்சனின் ஆவி தெரிவித்ததாக பிரபல உளவியல் திறனாளியான ஜேன் வலஸ் நடத்திய ஆவியுடனான உரையாடல் நிகழ்ச்சியின் பின்னர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வானது லன்டனில் கடந்த வெள்ளிக்கிழமையிரவு 10 மணி முதல் 12 மணிக்கிடையிலான நேரத்தில் ஆவிகளுடன் உரையாடும் இணையத்தளம் வாயிலாக இடம்பெற்றுள்ளது.
உங்கள் மரணத்திற்கு யார் பொறுப்பாளி என ஜேன் வினவியபோது, அதற்கு ஜக்சனின் ஆவி, எவரும் பொறுப்பல்ல. மருந்துகளை நான் மிதமிஞ்சி பாவிப்பது குறித்தும் அதனால் எதிர்கொள்ளக்கூடிய எதிர்மறையான விளைவுகள் குறித்தும் பலதடவை எச்சரிக்ககை செய்யப்பட்டேன்.
எனினும் நோயின் உக்கிரம் தாங்க முடியாததாலும் மருந்துகளின்றி உயிர்வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாலும் மருத்துவர்களின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தவில்லை எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவரது திஸ் இஸ் இட் என்ற திரைப்படம் வெளியானதையிட்டு ஜக்சன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், தான் பல முகங்களை கொண்டதோர் மனிதனாகவே வாழ்ந்ததால் உண்மையான தனது முகத்தை தானே ஒருபோதும் அறிந்திருக்கவில்லை எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2 கருத்துகள்:
மைக்கள் ஜாக்சன் நரகத்தில் வேதனை படுவதாக ஒரு சிறுமிக்கு கடவுளால் காட்டப்பட்டுள்ளது.
20 நவம்பர், 2012 அன்று 8:27 PMஇந்த இணையத்தை பார்க்கவும் :http://spiritlessons.com/
இந்த உலகம் முழுவதும் பிசாசுகளின் கட்டுபாட்டிற்குள் போய்கொண்டிருக்கிறது நீங்களும் அழிந்துவிடாத படிக்கு இவைகளை தெரிந்து கொள்ள பெந்தேகொஸ்தே சபைகளை நாடவும்
I am also telling the same மைக்கள் ஜாக்சன் நரகத்தில் வேதனை படுவதாக ஒரு சிறுமிக்கு கடவுளால் காட்டப்பட்டுள்ளது.
3 ஜூலை, 2020 அன்று 2:59 AMஇந்த இணையத்தை பார்க்கவும் :http://spiritlessons.com/
இந்த உலகம் முழுவதும் பிசாசுகளின் கட்டுபாட்டிற்குள் போய்கொண்டிருக்கிறது நீங்களும் அழிந்துவிடாத படிக்கு இவைகளை தெரிந்து கொள்ள பெந்தேகொஸ்தே சபைகளை நாடவும்
கருத்துரையிடுக