ஆயுதமேந்திய விமானம் கொழும்புக்கு வரவில்லை- இலங்கை மறுப்பு

கனரக ஆயுதங்களுடன் தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமானம் கொழும்பை நோக்கி வந்தது என்று வெளியான செய்திகளுக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரித்து நின்ற விமானம் வடகொரியாவிலிருந்து பெருமளவிலான கனரக ஆயுதங்களுடன் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது என்று தாய் அதிகாரிகளை மேற்கோள்காட்டி தாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. விமானம் தரையிறங்கியதும் தாய் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதனை சோதனையிட்ட போது அதனில் பெரும் தொகையான கனரக ஆயுதங்கள் இருக்கக் காணப்பட்டன.
விமான பணியாளர்கள் ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் உண்மையான இடத்தை மறைப்பதற்காக இலங்கைக்கு செல்வதாக பொய் கூறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக