JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 24 நவம்பர், 2009

பிரதமர் , வெளிவிவகார அமைச்சர் மேற்கிந்திய தீவு பயணம்


பொதுநலவாய அமைப்பின் 21ஆவது மாநாட்டில் (CHOGM) கலந்துகொள்வதற்காக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் மேற்கிந்திய தீவுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றனர்.

பொதுநலவாய அமைப்பின் 21 ஆவது மாநாடு டிரினிடாட்டொபாகோவில் இன்று ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் இலங்கை சார்பாக இவர்கள் இருவரும் கலந்துகொள்கின்றனர்.

மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அமைச்சர் போகொல்லாகம இன்று காலை மேற்கிந்தியதீவுக்கு புறப்பட்டுச் செல்வதாக வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.

பொதுநலவாய அமைப்பின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் காலநிலை மாற்றம், சர்வதேச பொருளாதாரம் மற்றும் அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான இறுதி மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வாரென்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010