JKR. Blogger இயக்குவது.

வியாழன், 3 டிசம்பர், 2009

ஈரப்பெரிய குளம் பயண அனுமதி அலுவலகம் மாற்றம்.


வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகள் பாஸ் அனுமதி பெற்றுவந்த அலுவலகம் ஈரப் பெரியகுளம் பகுதியிலேயே இதுவரை இயங்கி வந்தது.

இதனால் பயணிகள் பெரும் சிரமங்களையும் வீண் கால தாமதங்களையும் எதிர் கொள்வதாகத் தெரிய வந்ததையடுத்து சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் பயனாக மேற்படி அலுவலகம் நேற்று முதல் வவுனியா தேக்கவத்தை பகுதியில் இயங்க ஆரம்பித்துள்ளது.

அண்மையில் வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்;தா அவர்கள் மேற்படி புதிய அலுவலகம் அமையப் பெற்றுள்ள இடத்தைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010