JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

நாடகமும் அரங்கியலும் பாடநெறியை யாழ் தேசியக் கல்வியற் கல்லூரியில் தொடர்ந்தும் கற்பதற்கு அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை


சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக யாழ் தேசியக் கல்வியற் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் என்னும் பாடநெறியை மாணவர்கள் தொடர்ந்தும் கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்று வந்த நாடகமும் அரங்கியலும் எனும் பாடநெறி 2010 கல்வி ஆண்டிலிருந்து மட்டக்களப்பு தேசியக் கல்வியற் கல்லூரிக்கு மாற்றப்படவிருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு நடாத்திய பேச்சுவார்த்தையின் பயனாக அப்பாடநெறியை தொடர்ந்தும் யாழ் தேசியக் கல்வியற் கல்லூரியில் கற்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010