JKR. Blogger இயக்குவது.

திங்கள், 19 அக்டோபர், 2009

போலி 1000 ரூபா நாணயத் தாள்கள்

ராஜாங்கனையில் வீடொன்றினுளிருந்து போலி 1000 ரூபா நாணயத் தாள்கள் 90ஐப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

போலி நாணயத்தாள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் இரகசியப் பொலிசார் இவற்றைக் கைப்பற்றினர்.
அண்மையில் கொட்டவெஹெர பகுதியில் வைத்து இவ்வாறான 30 போலி நோட்டுகளுடன் கைப்பற்றப்பட்ட சந்தேக நபரிடம் நடத்திய விசாரணைகளையடுத்தே இந்த 90 நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. இந்த நாணயத் தாள்களை அச்சிடப் பயன்பட்ட அச்சு இயந்திரத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டு நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜார்படுத்தப்பட்ட நபர் எதிர்வரும் 22ந் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010