JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

100 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி

100 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்
- கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் 100 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையிலும் நாட்டின் 25 மாவட்டங்களிலும் இருந்து இம்மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவ்வறிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களின் உயர்தர கற்கை நெறிகளுக்கு உதவும் முகமாக இரு வருடங்களுக்கு மாதாந்தம் ரூபா 1,500 வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, தற்போது இந்திய அரசாங்கம் 75 புலமை பரிசில்களை இலங்கை மாணவர்களுக்கு அவர்களது பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்கென வழங்கியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010