JKR. Blogger இயக்குவது.

வியாழன், 12 நவம்பர், 2009

இன்று 13/11/ பொலிஸ் மா அதிபரை நேரில் சந்திக்கலாம்


பொலிஸ் மா அதிபரைத் தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்துப் பொலிஸ் சேவை தொடர்பான பிரச்சனைகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு இன்று முதல் பொதுமக்களுக்குக் கிட்டவுள்ளது.

பிரதி வெள்ளிக் கிழமைகளில் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரை பொலிஸ் மா அதிபரைச் சந்திக்கமுடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவிக்கிறார்.
இச்சந்திப்பு கொழும்புக் கோட்டையில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெறும்.

பொலிஸ் மா அதிபரைச் சந்திக்க வருவோர் தமது தேசிய அடையாள அட்டை, அல்லது கடவுச் சீட்டுடன் யோர்க் வீதி நுழை வாயிலூடாக பொலிஸ் தலைமையகத்திற்கு வரவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010