JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

மன்னாரில் 7 நாள் சிசு ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது


மன்னார் பிரதேசத்தில் 7 நாட்களேயான சிசு ஒன்றை பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்களில் மருத்துவர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மருத்துவ சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை ஒன்றே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக குறித்த குழந்தையை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்ததாகவும், அந்தக் குழந்தையை மருத்துவர் உள்ளிட்ட மூவர் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த குழந்தை வத்தளைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010