JKR. Blogger இயக்குவது.

சனி, 19 டிசம்பர், 2009

மன்னாரில் சோதனை கெடுபிடிகள் நேற்று முதல் தளர்வு : ஸ்ரீ.ல.சு.க. ஒருங்கிணைப்பாளர்


மன்னார் மாவட்டத்தில் உள்ள பல சோதனைச் சாவடிகளின் சோதனை நடவடிக்கைகள் நேற்று(18.12.2009.) வெள்ளிக்கிழமை மாலை முதல் தளர்த்தப்பட்டிருப்பதாக வடக்கு மக்கள் முன்னணியின் தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான திருமதி வீ. கீதாஞ்சலி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டம் செல்வதற்குப் பல மாதங்களாக போக்குவரத்துக் கெடுபிடிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன்.

இதன்போது, முதற்கட்டமாக பறையநாளன்குளம் மற்றும் மன்னார் கோட்டை சோதனை நிலையத்திலுள்ள அடையாள அட்டை சோதனையிடும் கெடுபிடிகள் போன்றவை உடனும் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது" என்றார்.

எனினும் இன்று நண்பகல் வரை மன்னாரிலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் கோட்டை சோதனை நிலையத்தில் பலத்த கெடுபிடிகளின் பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010