இரத்தினபுரி லெல்லுப்பிட்டிய கலவரத்தில் ஒருவர் கொலை

இரத்தினபுரி லெல்லுப்பிட்டியவில் நேற்று மாலை இடம்பெற்ற கலவரம் ஒன்றையடுத்து ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 39 வயதான நபர் ஒருவரே கொல்லப்பட்டவராவார்.
இது தொடர்பாக நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிமால் மெதிவக்க தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக