JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


சீனாவில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு
சீனாவில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு

சீனாவுக்கு பலகோடி மதிப்பிலான நிலக்கரி ஆஸ்திரேலியாவில் இருந்து ஏற்றுமதி

சீனாவுக்கு பலகோடி டன் நிலக்கரியை விற்பனை செய்யும் உடன்படிக்கையில் தாம் கைச்சாத்திட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில் அதிபர் கிளைவ் பால்மர் தெரிவித்துள்ளனர்.

ரிசோர்சஸ் ஹவுஸ் என்ற தனது நிறுவனம் சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை வென்றுள்ளதாகவும், ஆண்டொன்றுக்கு சுமார் 40 மில்லியன் டன் நிலக்கரியை தாங்கள் விற்பனை செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஏற்றுமதி திட்டத்தை செயற்படுத்த ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் மிகப்பெரிய சுரங்கத்தொழில் மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும், நிலக்கரியை ஏற்றுமதி செய்ய 500 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை வளங்களை பெற சீனா முயற்சித்து வருகிறது.


இரான் கூற்று குறித்து மேற்கத்தைய நாடுகள் அவநம்பிக்கை

இரான் அணுவசதி ஒன்று
இரான் அணுவசதி ஒன்று

இரானிய அணுசக்தி திட்டம் பற்றி அனைத்துலக நாடுகளுடன் உடன்படிக்கை ஒன்றை எட்ட தாம் நெருங்கி கொண்டிருப்பதாக இரான் விடுத்துள்ள அறிக்கை பற்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் நம்பிக்கையின்மையை வெளியிட்டுள்ளன.

அணு ஆயுதம் ஒன்றை தயாரிப்பதில் முன்னேற்றம் கண்டு வரும் இரான் அதனை முற்றாக நிறுத்திவிடும் அறிகுறிகள் எதுவும் தமக்கு தென்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

நிலைமையை தனக்கு சாதகமாக்க இரான் காலம் தாழ்த்தி வருகிறது என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பாப் அயின்ஸ்வொர்த் குறிப்பிட்டுள்ளார்.



இந்திய காஷ்மீரில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீர்
காஷ்மீர்

இந்தியா நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் வீதிகளில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் இதே போன்று மற்றுமொரு சிறுவன் இறந்த பின்பு பிறப்பிக்கப்பட்ட தடைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் மீறி இருந்தனர்.

சுதந்திரம் வேண்டும் என்று கூறி வரும் குழுக்கள் விடுத்த கடையடைப்பு ஐந்தாவது நாளாக இடம்பெற்று வருவதாகவும், இந்த பகுதியில் பதட்டம் உச்சமாக இருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.


அமெரிக்காவின் கிழக்கில் கடும் பனிப்பொழிவு

'வெள்ளை' மாளிகை
'வெள்ளை' மாளிகை

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இது மிக கடுமையான பனிப்பொழிவாக பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் மற்றும் பால்ட்டிமோர் பகுதிகளில் சூறாவளி காற்றால் பனி எங்கும் கொட்டியுள்ளது, இதனால் மரங்கள் கார்கள் மற்றும் கட்டிடங்கள் மீது விழுந்து போக்குவரத்து பாதித்துள்ளது.

முக்கிய விமானநிலையங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியரங்கம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்

ரஷ்யாவில் இலங்கை ஜனாதிபதி

ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சென்றுள்ளார். இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் இலங்கை ஜனாதிபதி, ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும், சீர் செய்வதற்கான கடன் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிடவுள்ளார்.

ரஷ்யாவை உண்மையான உற்ற நண்பனாக இலங்கை பார்க்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் மற்றுமொரு நிரந்தர உறுப்பினரான சீனாவுடன் இணைந்து இலங்கை அரசின் மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் வருவதை ரஷ்யா தடுத்து இருந்தது.

பல மாத காலமாகவே, ரஷ்யாவுக்கு நன்றி கூறி இலங்கையில் இருக்கின்ற ரஷ்ய தூதரகத்துக்கு முன்பாக பதாதை ஒன்று தொங்கி வருகிறது.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின் போது, சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் இலங்கைக்கு கொடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றும், இந்த கடன் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதற்கும், சிவில் மற்றும் இராணுவ உபயோகம் கொண்ட பொருட்களை வாங்குவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என ரஷ்யாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கடன் ஏற்கனவே இலங்கையிடம் இருக்கும் ரஷ்ய ஆயுதங்களை சீர் செய்யவும் பயன்படும் என்று இலங்கையில் இருக்கின்ற விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதம் மட்டுமன்றி தேயிலை வியாபாரத்திலும் இருநாடுகளுக்கும் இடையில் உறவு நிலவி வருகிறது. இலங்கை தேயிலையை அதிகமாக வாங்கும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது.

இந்நிலையில் நீண்டகாலமாக இருந்து வரும் அவசரகால சட்டத்தை இலங்கை நாடாளுமன்றம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. நபர்களை பிடித்து வைத்திருப்பதற்கு இந்த அவசரகால சட்டம் பெரும் அதிகாரத்தை கொடுக்கிறது. விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகாமல் இருக்க இந்த சட்ட நீட்டிப்பு அவசியம் என இலங்கை பிரதமர் கூறினார்.

இந்த சட்டம் மூலம், தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதியை கொல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எதிர்கட்சி ஆதரவாளர்களையும் அரசு பிடித்து வைத்துள்ளது. ஆனால் அரசின் குற்றச்சாட்டை எதிர்கட்சியினர் நிராகரித்துள்ளனர்.


அவசர நிலை சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதை பெப்ரல் விமர்சித்துள்ளது

இலங்கையில் அவசரகால சட்டம்
இலங்கையில் அவசரகால சட்டம்

இலங்கை நாடாளுமன்றத்தால் அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளதை பெப்ரல் எனப்படும் நியாயமான நேர்மையான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு விமர்சித்துள்ளது.

இது பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹோடியராச்சி,"இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கப் போகிறது எனவே இப்போது இது போன்ற அவசர கால நிலையை நீடிக்க தேவையில்லை" என்றார்.

அதே நேரம் அவசர கால நிலை காரணமாக தேர்தல் நடைமுறைகளுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றும், ஆனாலும் சில நேரங்களில் அரசியல் நோக்கங்களுக்காக இதை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். .

அவசர நிலை சட்டம் துஷ்பிரோயகம் செய்யப்பட்டதாக தமக்கு இதுவரை நேரடிப்புகார்கள் வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்


இந்தியாவில் உணவுப்பொருட்களின் விலை கட்டுக்குள் வரும் - இந்திய பிரதமர்

உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு
உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு

இந்தியாவில் பெருமளவு அதிகரித்துவிட்ட உணவுப்பொருள்களின் விலை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று, விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் உணவுப் பொருள்களின் விலை 18 சதம் அளவுக்கு அதிகரித்திருப்பது குறித்து அவர் கவலை வெளியிட்டார். உருளைக் கிழக்கு உள்ளிட்ட சில அத்திவாசியப் பொருட்களின் விலை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டதால் பொதுமக்கள் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலமும், மானியத் திட்டங்களை நீடிப்பதன் மூலமும், மக்களின் கோபத்தைத் தணிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

ஆனால், இன்று முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தறபோது இறங்குமுகத்தில் இருக்கும் விலைவாசி உயர்வு மேலும் குறையும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்தின் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விலை உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு யோசனைகளை முன்வைத்ததாகத் தெரிவித்தார்.

அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010