JKR. Blogger இயக்குவது.

சனி, 31 அக்டோபர், 2009

விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பில் பாரிய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் -சிங்கள ஊடகம் தகவல்! // ஸ்ரீலங்கா ரெலிகொமின் 42வீதபங்கு புலிகளுக்கு சொந்தம்..!

aniltte8ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளில் 42வீதத்தை தாம் வாங்குவதற்காக விடுதலைப்புலிகள் மலேசியாவிலுள்ள மக்ஸிஸ் ஊடாக முதலிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இலங்கை தேசிய தொலைத்தொடர்பு சேவையான ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வருவதற்காக இந்த பங்குகளை வாங்கும்படி கே.பி அனுமதிக்கப்பட்டார் எனவும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீலங்கா ரெலிகொமின் 51.23வீத பங்குகள் அரசாங்கத்துக்கு உரியன 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி மக்ஸிஸ் நிறுவனம் 320மில்லியன் ரூபா முதலிட்டு 42வீத பங்குகளை வாங்கியுள்ளது. தொலைத்தொடர்பு பிரிவின் தலைவர் ஒருவரும் அவரது சகோதரரும் இந்த வியாபாரத்தை நடத்திக் கொடுத்ததாகவும் அதற்காக மக்ஸிஸ் அவர்களுக்கு 1மில்லியன் ரூபா தரகுப்பணம் செலுத்த ஒப்புக் கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தேசிய பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் அதில் இணைந்த போது அந்த உடன்படிக்கை முறிந்து விட்டது. ஸ்ரீலங்கா ரெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரியை அவருக்கு போதிய தகுதிகள் இல்லாதபோதும் நியமனம் செய்தது மக்ஸிஸ் என்றும் அவருடைய சம்பளம் 13மில்லியன் ரூபா என்றும் ஒருசெய்தி தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு கொழும்பில் பாரிய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது பல்பொருள் அங்காடிகள், கடைத்தொகுதிகள், அடுக்குமாடி வீட்டுத்தொகுதிகள் என பல்வேறு பாரிய வர்த்தக கட்டமைப்புகளை புலிகள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த வர்த்தகர்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? என்பது குறித்த தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வர்த்தகர்கள் பெருந்தொகைப் பணத்தை புலிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010