JKR. Blogger இயக்குவது.

வியாழன், 31 டிசம்பர், 2009

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மட்டக்களப்பில் பிரசாரம் நடத்த மாநகர முதல்வர் அனுமதி


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டக்களப்பு நகரில் மைதானம் வழங்க ஏற்கனவே மறுப்புத் தெரிவித்திருந்த மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் தற்போது அனுமதியளித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சுங்க வீதியிலுள்ள காந்தி சிலை சதுக்கத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரம் பெற்ற தேர்தல் முகவர் சேகுதாவுத் பஷீர் (மாகாண சபை உறுப்பினர்) மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

மாநகர ஆணையாளரிடம் இதற்கான விண்ணப்பம் செய்திருந்த போதிலும் அதற்கான பதிலை மாநகர முதல்வரே தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளதாக சேகு தாவூத் பஷீர் தெரிவிக்கின்றார்.

"குறிப்பிட்ட இடத்தில் முன் கூட்டியே நிகழ்வுகள் நடை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் " என மாநகர முதல்வர் தனது பதிலில் தெரிவித்திருந்தார்."

இருப்பினும் இதற்கான அனுமதி நேற்று தங்களுக்கு கிடைத்துள்ளதாக ஐ.தே.க. வின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான அப்துல் லத்தீப் எமது செய்திச் சேவைக்கு தெரிவிததார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010