JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

வவுனியாவில் வடிகால் அமைப்புத் திட்டம் 10 நாட்களில் பூர்த்தி : அமைச்சர் சமரசிங்க

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவின் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகால் அமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படும்.

இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்ததாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில் பலர் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர். மற்றும் சிலர் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.

இவர்களைத் தவிர்ந்த சுமார் 2 லட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச்செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மழையினால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் வேலைத் திட்டங்கள் துரிதகெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010