லண்டன் உண்ணாவிரதப் போராட்டத்தில் மோசடி : பரமேஸ்வரன் மறுப்பு

இலங்கையில் யுத்தம் உச்சகட்டத்தை எட்டியிருந்த சமயத்தில், உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரி லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய பரமேஸ்வரன், மெக் டோனால்ட்ஸ் பன்களை சாப்பிட்டதாக பிரிட்டிஷ் ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இதனை பரமேஸ்வரன் மறுத்துள்ளார்.
இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் உண்ணாவிரத சர்ச்சையில் சிக்கியுள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் பன் சாப்பிட்டதைப் ரகசியப் பொலிஸ் கெமராக்கள் படம்பிடித்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி மேற்படி பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டனில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெரிய அளவிலான போராட்டங்கள் நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பாக நடைபெற்றன.
இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாகவே பரமேஸ்வரனி உண்ணா விரதப் போராட்டமும் இடம்பெற்றது.
இந்தப் போராட்டங்களுக்குப் பாதுகாப்பளிக்க பிரிட்டிஷ் பொலிசார் சுமார் 7 மில்லியன் பவுண்டுகளைச் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக