JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ஜட்டியுடன் பிட்சா வாங்க டாக்சி பிடித்த மாஜி அதிபர்

லண்டன் : ரஷ்ய அதிபர்களில் மொடாக்குடியர், மறைந்த போரிஸ் எல்சின்; அமெரிக்க அதிபர் மாளிகையில் விருந்தினராக தங்கியபோது, நள்ளிரவில் ஜட்டியுடன் கிளம்பி, பிட்சா வாங்கிச் சாப்பிட டாக்சி பிடிக்கப் போய்விட்டார்.


அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டனின் நண்பர், வரலாற்று ஆய் வாளர் டெய்லர் பிராஞ்ச்; கிளின்டனுடன் நடந்த சந் திப்புகள், பேச் சுக்களை, 79 முறை "டேப்' செய்து வைத்துள்ளார். அதை இப்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார். கிளின்டன் காதலித்த மோனிகா லெவன்ஸ்கி விவகாரத்தில் ஆரம் பித்து, பல சம்பவங்களை, டெய் லர் தன் புத்தகத்தில் விவரித்துள்ளார். எல்சினின் மதுப்பழக்கம் பற்றிய ஒரு சம்பவத்தை அவர் கூறியுள்ளார்.


எல்சின் மொடாக்குடியர்; தினமும் குடிக்காமல் இருக்க மாட்டார். எப்போதும் போதையில் தள்ளாடியபடி தான் இருந்திருக்கிறார். கடந்த 1995ல், அமெரிக்க அதிபர் கிளின்டனை சந்தித்தார். அதிபர் மாளிகையில் விருந்தினராக அவர் தங்கினார். போதையில் நள்ளிரவில் எழுந்து கொண்டார். அப்போது அவர் வெறும் ஜட்டி அணிந்திருந்தார். மேல் சட்டை யை போட்டுக்கொண்ட அவர், பாதுகாவலர்களுக்கு எப்படியோ "டிமிக்கி' கொடுத்து விட்டு, சாலையில் நடந்தார்.சில நிமிடங்களில் இதை அறிந்த பாதுகாவலர்கள் தேடிய போது, சாலையில், டாக்சியை வழிமறித்து டிரைவருடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் சென்று கேட்டபோது குழறியபடி, "எனக்கு பிட்சா வேணும். அதனால்தான் போய்க் கொண்டிருக்கிறேன்' என்று, ரஷ்ய மொழியில் கூறினார்.அவரை ஒரு வழியாகச் சமாதானப்படுத்தி, அதிபர் மாளிகைக்கு அழைத்து வந்தனர் பாதுகாவலர்கள். மறுநாள் காலையில், இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல, கோட்டு சூட்டுடன் கிளின்டனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, பலரையும் வியக்க வைத்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010