கல்லடி கடலில் குளிக்கச் சென்ற மாணவன் பலி

மட்டக்களப்பு கல்லடி கடலில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் சின்ன ஊறணியைச் சேர்ந்த தேவராசா தேவிதரன் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மற்றுமொரு மாணவன் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட இருவரும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக