JKR. Blogger இயக்குவது.

திங்கள், 9 நவம்பர், 2009

கியூபா - அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை விஜயம்


கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் மார்க்கோ டொபிரஸ் கஸ்ரோ இலங்கை வந்துள்ளார். நேற்று மாலை இலங்கை வந்தடைந்த கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, இரு நாட்டு உறவுகளையும் மேலும் பலப்படுத்தும் வகையில் உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதேவேளை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் ஒருநாள் உத்தியோக பூர்வ விஜயம்மொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார்.வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் மற்றும் பல அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இச்சந்திப்புக்களின் போது இருநாட்டு உறவுகளைப் பலப்படுத்துவது மற்றும் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010